தமிழ்நாடு

பயணிகள் வருகை அதிகரிப்பு: குற்றாலத்தில் போக்குவரத்து நெரிசல்

பயணிகள் வருகை அதிகரிப்பு: குற்றாலத்தில் போக்குவரத்து நெரிசல்

webteam

தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. 

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் முக்கியமானது குற்றாலம்.  தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் குற்றால சீசன் மாதங்கள். கேரளாவில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கும் மே மாத இறுதி முதல் ஆகஸ்ட் வரை குற்றாலத்தில் சாரல் மழை பொழியும். 
இந்த வருட சீசனில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்பட்டதால் குளிப்பதற்கு பல முறை தடைவிதிக்கப்பட்டது. அதோடு முந்தைய வருடங்களை விட சுற்றுலா பயணிகள் குறைவுதான் என்று கூறப்படுகிறது. 
இந்நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் குளித்து‌ மகிழ்ந்தனர். ஆனால் நகரில் சுற்றுலா வாகனங்கள் ஆங்காங்கு ‌நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.