தமிழ்நாடு

கொடைக்கானலுக்கு பஸ்ல போறீங்களா? இ-பாஸ் வேண்டாம்..!

jagadeesh

கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக்கு, பொதுப்போக்குவ‌ர‌த்து பேருந்துக‌ளில் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் இ-பாஸ் இல்லாம‌ல் வ‌ர‌லாம் என்று உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை தவிர மற்ற இடங்களுக்கு இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ஊட்டி, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு இ-பாஸ் பெற்றே சுற்றுலாப் பயணிகள் சென்று வந்தனர்.

இந்நிலையில் கொடைக்கானல் மலைவாசத் தலத்துக்கு சுற்றுலாப் பயணிகள், பொதுப் போக்குவரத்தில் இபாஸ் இல்லாமல் வரலாம் என உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார். மேலும் "வெள்ளி நீர்வீழ்ச்சி பூங்காவினுள் சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ இன்று முத‌ல் அனும‌தியளிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில‌ தின‌ங்க‌ளில் கோக்க‌ர்ஸ் வாக் உள்ளிட்ட‌ அனைத்து சுற்றுலா த‌ல‌ங்க‌ளும் ப‌டிப்ப‌டியாக‌ திற‌க்க‌ப்ப‌டும் என்றும் தெரிவித்துள்ளார்.