நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், ஹோம் மேட் சாக்லேட் உற்பத்தியும் கூடியுள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்ட நிலையில், சுற்றுலாவை நம்பி தொழில் செய்து வந்த 22 ஆயிரம் குடும்பங்கள் வருவாய் இன்றி தவித்து வந்தன.
தற்போது மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் தளர்வுகள் உள்ள நிலையில், உதகையின் இதமான காலநிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். இதனை அடுத்து ஹோம் மேட் சாக்லேட் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் அதன் தயாரிப்புப் பணியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.