தமிழ்நாடு

கழிவறையை சுத்தம் செய்ய மாணவிகளுக்கு நிர்பந்தம்: ஆதி திராவிடர் விடுதியின் அவலம்

கழிவறையை சுத்தம் செய்ய மாணவிகளுக்கு நிர்பந்தம்: ஆதி திராவிடர் விடுதியின் அவலம்

Rasus

திருப்பூர் மாவட்டம் ராயபுரம் ஆதி திராவிடர் பெண்கள் விடுதியில் மாணவிகளை, காப்பாளர் கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் பெருமாநல்லுர் பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி. இவரின் இரண்டாவது மகள், அங்குள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்கு வந்து செல்ல அதிக தூரம் என்பதால் பள்ளிக்கு அருகில் உள்ள ஆதி திராவிடர் பெண்கள் விடுதியில் தங்கியிருக்கிறார். இந்த விடுதியில் 42 மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவிகளை தொடர்ந்து கழிவறையை சுத்தம் செய்தல், சமையல் செய்யும் பணிகளுக்கு
அழைத்தல், மற்றும் விடுதியின் வார்டன் சங்கீதா காரை சுத்தம் செய்தல் என பணி செய்ய வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக புகைப்பட ஆதாரத்துடன் மாணவியின் தந்தை மூர்த்திர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் விடுதியில் சேர பணம் கேட்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. புகாரின் பேரில் விடுதி காப்பாளர் சங்கீதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.