தமிழகம் முழுவதும் பரவலாக மழை. நாளையும் நாளை மறுதினமும் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை.
சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படவிருந்த ஃபாஸ்டேக் திட்டம் டிசம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலஅவகாசம்.
தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள். 4 பேர் கைது.நீதி கேட்டு மெகுழுவர்த்தி ஏந்தி மக்கள் பேரணி.
பெண் மருத்துவர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பத்தின் தாக்கம் தணிவதற்குள் தெலங்கானாவில் அடுத்த அதிர்ச்சி. மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுப்பு.காவல்துறை தீவிர விசாரணை.
ஜார்க்கண்டில் 13 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு. நக்சல் ஆதிக்கம் உள்ள மாநிலம் என்பதால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு.
லண்டன் நகரின் மேம்பாலத்தில் பயங்கரவாதத் தாக்குதல். பலர் காயமடைந்த நிலையில், ஒருவரை சுட்டு வீழ்த்தியது காவல்துறை.