தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

Rasus

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் .

மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக, சட்டப்பேரவையைக் கூட்டுவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோச‌க்கப்பட உள்ளது. விவசாயப் பிரச்னைக்குத் தீர்வு க‌ண்பது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் குடிநீர் பிரச்னை, அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ‌அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக பல்வேறு தடங்கல்கள் இருந்து வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் 3வது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.