தமிழ்நாடு

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்: குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க

Rasus

தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டுமருந்து முகாம் நாளை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கா‌க ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன‌. மேலும் பயணிகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் போலியோ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 1,000 நடமாடும் மையங்களும் ‌அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் 71 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.