தமிழ்நாடு

நீலகிரியிலுள்ள 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நீலகிரியிலுள்ள 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

webteam

நீலகிரியில் உள்ள 4 தாலுகா பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன்காரணமாக விருதுநகர், மதுரை ஆகிய  மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. மேலும், கொடைக்கானல், தூத்துக்குடி, ராமநாதபுரம்,வேலூர் , சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அதிக மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.