அதிமுகவின் இரு அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை நாளை தொடங்குகிறது.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகள் சார்பிலும் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுக்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அப்போது, இரு அணிகள் சார்பிலும் சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவை என்னென்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
பொதுச் செயலாளர் முறைப்படி தேர்வு செய்யப்படும் வரை, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைத்து கட்சியை வழிநடத்தலாமா என்பது பற்றி பேசப்படலாம் எனக் கூறப்படுகிறது.