தமிழ்நாடு

திருப்பதியில் நாளை மகா கும்பாபிஷேகம்

திருப்பதியில் நாளை மகா கும்பாபிஷேகம்

webteam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அஷ்டபந்தன சமர்ப்பணம் நடைபெற்றது. மேலும் கும்பாபிஷேகத்தையொட்டி கொடி மரத்தின் மேல் அமைப்பதற்காக ரூ 1.5 லட்சம் செலவில் 11 தங்க அரசை இலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தங்க கொடி மரத்தின் மேல் அமைப்பதற்காக ரூ 1.5 லட்சம் செலவில் 11 தங்க அரசை இலைகள் மற்றும் கொடிமரத்திற்கும், பீடத்திற்கும் இடையே அமைப்பதற்கான ரூ 4 லட்சம் செலவில் தங்கத்தால் செய்யப்பட்ட சட்டமும், மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையத்தில் விமான வெங்கடேஸ்வர சுவாமியை சுற்றி அமைப்பதற்காக ரூ 1.75 லட்சம் செலவில் வெள்ளி மகரதோரணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை பொருத்தும் பணிகளை செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.