இந்தியாவில் நாளைக்கு பகுதியளவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.
நள்ளிரவு 12.12 மணிக்கு தொடங்கும் கிரகண நிகழ்வு நாளை அதிகாலை 1.31 மணிக்கு முழுமையடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாளை அதிகாலை 4 மணி 29 நிமிடத்திற்கு கிரகணம் முற்றிலும் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வை இந்தியாவில் எல்லா பகுதிகளில் இருந்தும் வெறும் கண்களால் கண்டுகளிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் அடுத்த முழுமையான கிரகணம் 2021-ம் ஆண்டுதான் ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்கோட்டில் வரும் நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன் மீது படிந்திருக்கும்.