தமிழ்நாடு

வரத்து குறைவால் நூறு ரூபாயை எட்டிய தக்காளி விலை - காய்கறிகளின் விலையும் உயர்வு

Sinekadhara

கனமழை காரணமாக வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சில்லறை விற்பனையில் 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதி கனமழை காரணமாக, வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெங்காயம், 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கேரட் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.