தமிழ்நாடு

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்கிறது..!

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்கிறது..!

Rasus

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்‌ தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், சுங்கவரிக் கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது‌.

தமிழகத்தில் மொத்தமுள்ள 43 சுங்கச்சாவடிகளில், 20-இல் மட்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் சுங்கவரிக்கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் இந்த கட்டணம் மாற்றியமைக்கப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர், ஸ்ரீபெரும்புதூர், சூரப்பட்டு, ஆத்தூர், பூதக்குடி, சின்னசமுத்திரம், கிருஷ்ணகிரி, வாகைகுளம் உள்ளிட்ட 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதில் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம் மற்றும் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 6 சுங்கச்சாவடிகளும் அடங்கும்.