நாடு முழுவதும் இன்று 73ஆவது சுதந்திர தினம் உற்சாகக் கொண்டாட்டம்.
காஷ்மீர் விவகாரம் எதிரொலியாக முன் எப்போதும் இல்லாத அளவு தீவிர கண்காணிப்பு. தேசிய பாதுகாப்பு படை, ஸ்வாட் கமாண்டே படை, ராணுவம், துணை ராணுவப்படை, டெல்லி காவல்துறை என செங்கோட்டையைச் சுற்றிலும் பல அடுக்கு பாதுகாப்பு
சுதந்திர தினத்தையொட்டி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் முன் எப்போதும் இல்லாத அளவு ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லையில் முகமூடி கொள்ளையர்களை விரட்டி அடித்த தம்பதிக்கு அதீத துணிவுக்கான விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில், அவர்களுக்கு, முதலமைச்சர் விருது வழங்கி கவுரவிக்கிறார்.
அத்திவரதர் தரிசனத்துக்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கருட சேவை நடைபெறுவதால் இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் ரத்து.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.