மக்களவை உறுப்பினர்களாக மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட 313 பேர் நேற்று பதவியேற்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள் இன்று எம்பி ஆக பதவியேற்கின்றனர்.
தமிழகத்தை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
எகிப்து முன்னாள் அதிபர் முகமது மோர்சி திடீர் மரணம் அடைந்தார். நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது. ஷகிப் அல் ஹசனின் அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது