கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடி சீன, ரஷ்ய அதிபர்களுடன் தனித் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இத்தகைய சந்திப்புகள் பரஸ்பர உறவுகளை மேம்படுத்தும் வகையில் அமைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் செய்கிறார். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும்போது பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கில் இயக்குநர் ரஞ்சித்துக்கு முன் ஜாமீன் வழங்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் கொண்டாடும் மாமன்னனை தவறாக பேசியது ஏன் என ரஞ்சித்துக்கு நீதிபதி கண்டனம்.
மதுரை அருகே அங்கன்வாடியில் பட்டியலின பெண்களுக்கு எதிர்ப்பு எழுந்த விவகாரத்தில், பணியமர்த்தப்பட்ட அங்கன்வாடியிலேயே பணியை தொடர மாவட்ட பொறுப்பு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என அணுமின்நிலையம் விளக்கம்.
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நாள்தோறும் 7 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.