இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு. பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
கேரளாவில் 14 பேரை கொரோனா தாக்கியுள்ள நிலையில் சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள். வெளிநாடுகளில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்தல்.
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல். சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் சூழல்.
சேலம் அருகே சாதி மறுப்புத் திருமணம் செய்த சில மணி நேரங்களில் மணமகள் கடத்தல். தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 50 பேர் மீது வழக்குப்பதிவு
நடிகர் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி. நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய திராவிடர் விடுதலைக்கழகம் முடிவு.
தமிழகத்தில் வரும் 27-ஆம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.
விநியோகஸ்தர்களுக்கான வரியை ரத்து செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம். புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்.
பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ்-க்கு கொரோனா பாதிப்பு. வைரஸ் பீதியால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல் பரப்புரையை ரத்து செய்தனர் சாண்டர்ஸ், ஜோ பிடன்.