தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் !

இன்றைய முக்கியச் செய்திகள் !

Rasus

வரும் 15-ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

எம்எல்ஏக்களின் ராஜினாமா குறித்து இன்றே முடிவெடுக்க கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் வரும் 18-ஆம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை அளிக்க வேண்டும் என 3 பேர் அடங்கிய சமரசக்குழுவுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. அதிமுக ஆதரவுடன் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் தனது வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளார்.

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். ஜோலார்பேட்டையிலிருந்து நாளை முதல் குடிநீர் கொண்டுவரப்படுமென தகவல் வெளியாகி உள்ளது.