தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சீன அதிபர் ஸி ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கத் தமிழ்நாடு தயாராகி வருகிறது.

தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாளான 26ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவல் அதிகாரிகளைப் பணி இடமாற்றம் செய்திடுக என்று தமிழ்நாட்டு டிஜிபிக்கு தமிழ்நாட்டு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.  

அரசு மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற இடைத்தேர்தல் முடிவு வரை காலக்கெடு விதித்துள்ளனர். நிறைவேற்ற தவறினால் வரும் 25ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். 

மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.

அமெரிக்கப் படை வெளியேறிய உடனேயே சிரியா மீது துருக்கி தாக்குதலை தொடங்கியுள்ளது.