தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்தை ஒட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கடையடைப்பு நடத்தப்படுகிறது.
தனது மருத்துவப் படிப்பு எட்டா கனவாகிவிட்டது என எண்ணி, அரியலூர் மாணவி அனிதா மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு மரியாதை செலுத்தும் வகையிலும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டிக்கும் வகையிலும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கடையடைப்புப் போராட்டம் நடத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து இன்று கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
மருந்துக்கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து கடைகளும் அரியலூரில் மூடப்பட்டுள்ளன. பெரம்பலூரிலும் பெரும்பாலான கடைகள் மற்றும் வளாகங்கள் அடைக்கப்பட்டுள்ளன.