தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்

இன்றைய முக்கியச் செய்திகள்

jagadeesh

இலங்கையில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது அதிபர் தேர்தல்.

மண்டல பூஜைக்காக இன்று சபரிமலை நடை திறக்கப்படுவதால் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு.

மாணவி பாத்திமாவின் உயிரிழப்புக்கு பேராசிரியரே காரணம் என தந்தை அப்துல் லத்தீப் குற்றச்சாட்டு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து முறையீடு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையாது. தமிழக அரசு கொண்டுவந்த சட்டப்பிரிவு செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மகாராஷ்டிராவில் ஆளுநரை இன்று சந்திக்கின்றனர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.11 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் இரட்டை சதம். இந்திய அணி முதல் இன்னிங்சில் 493 ரன்கள் குவித்து அபாரம்.