தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் சில !

இன்றைய முக்கியச் செய்திகள் சில !

webteam

காஷ்மீர் விவகாரத்தில் எவர் தலையீட்டையும் அனுமதிக்கமாட்டோம். ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த பாகிஸ்தான் கோரிய நிலையில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முப்படைகளும் 9 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நவீனமயமாகிறது. அதிகரித்து வரும் அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

5 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை அடையவே வங்கிகள் இணைப்பு. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆர்பிட்டர் மூலம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோ தீவிர முயற்சி.லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு கிடைக்காத நிலையில் நம்பிக்கையுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாட்டுப் பயணத்தில் 8,835 கோடி ரூபாய் மதிப்புக்கு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம். அதிமுக ஆட்சியில் வந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.

மதுரையை அடுத்த காயாம்பட்டியில் தீண்டாமை அடையாளமாக இருந்த பூட்டு அகற்றம்.

நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் திட்டம் தொடக்கம். காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் ஆசிய சாம்பியன் கத்தாருடனான ஆட்டத்தை டிரா செய்தது இந்தியா. எதிரணியின் 27 கோல் முயற்சிகளை தடுத்து நிறுத்தி இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து அசத்தினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை அதிரடியாக நீக்கினார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆலோசனைகள் ஏற்கும் படியாக இல்லாததால் நீக்கம் என விளக்கம் அளித்துள்ளார்