தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்!  

இன்றைய முக்கியச் செய்திகள்!  

webteam

சிபிஐ காவல் முடிந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

தமிழ்நாட்டில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளைகள் தொடங்கப்பட உள்ளன.

காஷ்மீர் மறுசீரமைப்புக்கு பிறகு முதன்முறையாக ராணுவ தலைமை தளபதி இன்று அங்கு செல்கிறார்.

நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரொக்கத்தின் மதிப்பு 21 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கோவையில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனைக்குப் பின் இருவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஓட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியுடனான இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர் தோனிக்கு இடமில்லை.