தமிழ்நாடு

“ஆறுக்குட்டி நன்றாக நடனமாடுகிறார்” - சட்டசபையில் இன்றைய சுவாரஸ்யங்கள்

rajakannan

சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. 

வழக்கமாக சட்டசபை கூட்டத் தொடர்களின் போது காரசாரமான விவாதங்கள் நடைபெறும். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவார்கள், வெளிநடப்பு செய்வார்கள் என ஒரே விறுவிறுப்பாக இருக்கும். இருப்பினும், அவ்வவ்போது சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். 

அதேபோல், இன்றும் சட்டசபையில் பல்வேறு சுவாரஸ்யமான உரையாடல்கள் நடந்தன. 

கேள்வி-பதில் உடையாரல்கள்:-

1. திமுக எம்எல்ஏ ராமசந்திரன் - எம்எல்ஏக்களுக்கு கொடுக்கும் புத்தகங்கள் அதிக கனமாக இருப்பதால் அதை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே காகிதத்திற்கு மாற்று பொருள் வேண்டும். 

சபாநாயகர் - இதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

2. திமுக எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர் -  தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் யாருடையது ? இயக்குபவர் யார் ? 

திரைப்படங்கள் ரிலீஸ் ஆன அன்றே இண்ட்நெட்டில் வெளியிட்டுவிடுகிறார்கள். ஆன்டி ஹீரோவாக தமிழ்ராக்கர்ஸ் நல்ல பெயரை எடுக்கிறது

3.  திமுக எம்.எல்.ஏ வாகை சந்திரசேகர் -  அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டி நன்றாக நடனமாடுகிறார். எனவே அந்த மாதிரி கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

4. தெலுங்கு, கன்னடத்தில் பேசிய தளி திமுக எம்எல்ஏ பிரகாஷ்

தளி எம்.எல்.ஏ பிரகாஷ் - தளி உள்ளிட்ட பகுதிகளில் தமிழைக் கட்டாயமாக்கக் கூடாது. அருகில் உள்ள கர்நாடக மாநிலத்தில்  தமிழ்க் கற்றுகொடுக்கப்படுகிறது. அவர்கள் தண்ணீர் மட்டும் கேட்குறீங்க கன்னட படிக்க மாட்டீங்களா என்று கேட்கின்றனர் 

அமைச்சர் செங்கோட்டையன் - தமிழ்க் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதில் மாற்றமில்லை 

தெலுங்கு, கன்னட மொழியில் பேசிய திமுக எம்எல்ஏ 

பிரகாஷுக்கு, தெலுங்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதில் அளித்தார்