தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள் சில..!

இன்றைய முக்கியச் செய்திகள் சில..!

Rasus

17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அப்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்.பி.க்கள் பதவியேற்கின்றனர்.

குடிநீர் பிரச்னை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.  மாநிலம் முழுவதும் வறட்சி நிலவும் நிலையில், அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார்.

வேலைவாய்பின்மை, விவசாயிகள் பிரச்னை, வறட்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அரசு நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்.

நாடெங்கும் இன்று மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர். மேற்கு வங்கத்தில் மருத்துவர் மீதான தாக்குதலை கண்டித்து 24 மணி நேர போராட்டம் நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்ததில்லை என்ற சாதனையை தக்க வைத்துக்கொண்டது விராட் கோலியின் படை.