அம்பேத்கரை அவமதித்ததாக மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக, நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்... நாளை நாடு முழுவதுமுள்ள ஆட்சியர் அலுவலகங்களை நோக்கி பேரணி நடத்த முடிவு.
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக கைவிடக்கோரி கிராம மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டத்தை தமிழ் பண்பாட்டு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் முழக்கம்.
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை கைவிட மத்திய அரசு தயாராக இல்லை என மதுரை எம்.பி. வெங்கடேசன் புதிய தலைமுறைக்கு பேட்டி.
ரசிகர் உயிரிழப்பு விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்லெறிந்து தாக்குதல். மாணவர் அமைப்பினரின் செயலுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம்.
ஹைதராபாத்தில் ரசிகை மரணத்தன்று திரையரங்கில் இருந்து நடிகர் அல்லு அர்ஜூன் பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. ரேவந்த் ரெட்டியின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில் சிசிடிவி வீடியோவை வெளியிட்ட தெலங்கானா காவல்துறை.
“பதவியேற்ற முதல் நாளிலேயே திருநங்கைகள் என்ற மடத்தனத்தை நிறுத்துவேன்... ஆண், பெண் பாலினங்கள் மட்டுமே கொள்கையாக இருக்கும்” என, அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ட்ரம்ப் சர்ச்சை பேச்சு.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா புதிய வரலாறு... ஒரு ஆண்டில் அதிக ரன்களை குவித்தவர் என சாதனை படைத்தார்.
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஆசியக் கோப்பை டி 20 கிரிக்கெட். இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி மகுடம் சூடியது இந்திய அணி.
“ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம், கவலைக்குரியது அல்ல. பயிற்சியின்போது வழக்கமாக ஏற்படும் காயம்தான்” என வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் தகவல்.
சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல். அதிகாரப்பூர்வ அட்டவணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி அறிவிப்பு. ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்கும் ஒருநாள் போட்டிக்கான அணியில் ஹாரி ப்ரூக், பில் சால்ட், ஆர்ச்சர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு.
தனது ரசிகர்களுக்கு இனிப்பான தகவல் கொடுத்துள்ள நடிகர் சூர்யா... ஆண்டுக்கு 2 படங்கள் வெளியாகும் என ரசிகர்களுடனான சந்திப்பின்போது உறுதி.
பாகுபலி-2 படத்தின் வசூல் சாதனையை தகர்த்த புஷ்பா 2.... இந்தியாவில் மட்டும் 18 நாட்களிலேயே ஆயிரத்து 52 கோடி ரூபாய் கலெக்சன்.
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும். ஏழாவது முறையாக திமுக ஆட்சியமைப்பதே இலக்கு என கட்சி செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பேச்சு.
அம்பேத்கரை விமர்சித்து பேசியதாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து திமுக செயற்குழுவில் தீர்மானம். மொத்தம் 12 தீர்மானங்களை நிறைவேற்றியது திமுக செயற்குழு.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு கடன்கார மாநிலமாக மாறியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம். ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காக கிடைக்கும் 70 சதவிகித நிதியை, அரசு எந்த வகையில் செலவு செய்கிறது என்றும் கேள்வி.
கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை மத்திய அரசு, 2 ஆயிரத்து 151 கோடி நிதி வழங்காமல் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக சொந்த நிதியிலிருந்து அனைத்தையும் மேற்கொள்வதாக அண்ணாமலை கருத்துக்கு பள்ளிக்கல்வித்துறை பதில்.