தமிழ்நாடு

இன்று சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் கமல்!

இன்று சட்டமன்றத் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார் கமல்!

Veeramani

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை இன்று மதுரையில் தொடங்குகிறார்.

சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில், இன்று முதல் வருகிற 16-ஆம் தேதி வரை மதுரை மற்றும் நெல்லை பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்கிறார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் முதலில் அவனியாபுரம் மற்றும் பசுமலை பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

மாலையில் கீழ வாசலில் பரப்புரை மேற்கொள்ளும் கமல்ஹாசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக மையத்தில் இளைஞர்கள் பெண்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர் கருப்பாயூரணியில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.