நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,838 பதவிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிட 74,416 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற பரிசீலனையின்போது, தகுதியற்ற வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெற இன்று கடைசிநாள்.
இதையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள இறுதி வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் சுயேச்சைகளுக்கான சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதி மின்னணு முறையில் ஒரே கட்டமாக பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதையும் படிக்க: கொடுத்த வாக்குறுதிகளில் 75 சதவீதத்திற்கும்மேல் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்