தமிழ்நாடு

விழாக்கோலம் பூண்ட தஞ்சை முதல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரை..! #TopNews

விழாக்கோலம் பூண்ட தஞ்சை முதல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வரை..! #TopNews

Rasus

கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு. மாநில பேரிடராக அறிவித்தார் முதலமைச்சர் பினராயி விஜயன்.

சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 406 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என மத்திய அரசு அறிவிப்பு. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டவட்டம்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை 6 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம். குற்றவாளிகள் 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு பிரதமர் மோடி கண்டனம். மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க அரசியல் சதி என குற்றச்சாட்டு

பெரியகோயில் குடமுழுக்கையொட்டி விழாக்கோலம் பூண்டது தஞ்சை. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு.

ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள ஒருபோதும் அனுமதிக்க முடியாது. புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் பாரதிராஜா கருத்து.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர். அரையிறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.