தமிழ்நாடு

வெளிச்சத்திற்கு வந்த விக்ரம் லேண்டர் முதல் ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தரமான சம்பவம் வரை

வெளிச்சத்திற்கு வந்த விக்ரம் லேண்டர் முதல் ஆசிய வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தரமான சம்பவம் வரை

webteam

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடித்தது நாஸா. அதிநவீன கேமராவில் பதிவான புகைப்படம் வெளியீடு.

தமிழகம் முழுவதும் பரவலாக கனழை. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு. பல இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதி.

தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணிப்பு. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை.

மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து பலியானவர்களில் 16 பேரின் உடல் ஒரே நேரத்தில் தகனம். உறவினர்கள் நடத்திய போராட்டத்தில் பயங்கர தள்ளுமுள்ளு. போலீசார் தாக்குதல்.

வீடு இடிந்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று மேட்டுப்பாளையம் செல்கிறார் முதல்வர்.

நகர்ப்புற பகுதிகளுக்கு தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி பேட்டி. ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருப்பது குறித்து பல்வேறு கட்சியினர் விமர்சனம்.

சிலைக் கடத்தல் வழக்கு ஆவணங்களை உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும். பொன்.மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

ஐதராபாத் மற்றும் கோவை பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பெண்கள் அமைப்பினர் நாடெங்கும் போராட்டம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கொந்தளிப்பு.

இணைந்து பணியாற்ற பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை நிராகரித்ததாக சரத் பவார் தகவல். மகள் சுப்ரியா சுலேவிற்கு மத்திய அமைச்சர் பதவி தர முன்வந்ததாக பேட்டி.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம். கலப்பு இரட்டையர் பிரிவில் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி அசத்தல்.