ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தர்மத்துக்கு புறம்பாக திமுக செயல்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு. இன்று மறைமுக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை.
நாடு முழுவதும் அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம். போராட்டங்கள் தொடரும் நிலையில் அரசிதழில் வெளியீடு.
ஜேஎன்யூ தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ்-க்கு தொடர்பு என காவல்துறை குற்றச்சாட்டு.
உத்தரபிரதேசத்தில் லாரி மீது மோதியதில் பற்றி எரிந்தது பேருந்து. தீயில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு.20க்கும் மேற்பட்டோர் காயம்.
இலங்கைக்கு எதிரான டி 20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றது இந்தியா. புனேவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.