தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முதல்...சபரிமலை மண்டல பூஜை வரை..!

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முதல்...சபரிமலை மண்டல பூஜை வரை..!

Rasus

தமிழகத்தில் 156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு. ஒரு கோடியே 30 லட்சம் பேர் வாக்களிக்க தயார் நிலையில் வாக்குச்சாவடிகள் உள்ளன.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது.

தலைமைப் பண்பு என்பது மக்களை வன்முறைக்கு தூண்டுவதல்ல என ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் கு‌றித்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வதந்திகளை பரப்புவதாக அமித் ஷா குற்றச்சாட்டு. வன்முறையில் இறங்கும் அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்களுக்கு சிரமம். போதிய பேருந்துகள் இல்லாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்.