தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்...!

இன்றைய முக்கியச் செய்திகள்...!

Rasus

மேயர், நகர்மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள் மூலம் மேயர் உள்ளிட்டோரை தேர்வு செய்ய நடவடிக்கை.

சர்வாதிகாரப் போக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு திட்டமிடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. ஜெயலலிதா தேர்தல் நடத்திய முறையையே பின்பற்றுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்.

கோவா திரைப்பட விழாவில் சிறப்பு விருதைப் பெற்றார் ரஜினிகாந்த். வாழவைத்த தெய்வங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி எனக் கூறி நெகிழ்ச்சி.

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

மகாராஷ்டிராவில் விரைவில் நிலையான ஆட்சி அமையும் என காங்கிரஸ் நம்பிக்கை. முதலமைச்சர் பதவியை சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு.

பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 4 பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். பங்குகளை விற்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

வெப்பச்சலனம் மற்றும் லேசான காற்றழுத்த தாழ்வு நிலையால் 2 நாட்கள் மழை தொடரும். 7 மாவட்டங்களில்‌ கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தகவல்.

இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச இன்று பதவியேற்பு. ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரையில் பதவியில் நீடிப்பார் எனத் தகவல்.