தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

Rasus

பயங்கரவாதத்தால் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இழப்பு. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிரான வழக்கு. நீதிபதிகளின் மாறுபட்ட நிலைப்பாட்டால் 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் செல்லும் என்ற உத்தரவை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு. வலுவான ஆதாரம் இல்லாததால் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு.

மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பழனிசாமி இடமாற்றம். அரசின் நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்.‌

ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றம். உரிய நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தல்.

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.இந்தோனேசியாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். 7.4 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுப்பு.