தமிழ்நாடு

#TopNews இந்தியாவில் கொரோனா; கேன் குடிநீர் ஆலைகளுக்கு எச்சரிக்கை; இன்னும் சில செய்திகள்

#TopNews இந்தியாவில் கொரோனா; கேன் குடிநீர் ஆலைகளுக்கு எச்சரிக்கை; இன்னும் சில செய்திகள்

Rasus

இந்தியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று. மக்கள் அச்சப்பட தேவையில்லை என பிரதமர் மோடி வேண்டுகோள்.

சீனாவை தொடர்ந்து ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்பு. முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் என உலக சுகாதார நிறுவனம் கவலை.

கொரோனா பாதிப்பை குணப்படுத்த தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடிக்க வேண்டும். சுகாதார சீரமைப்புத் திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்.

மத்திய தொல்லியல் துறையின் கீழ் தமிழக கோயில்களை கொண்டுவந்தால் மக்களை திரட்டி போராட்டம். பாரம்பரியத்தை பறிக்கும் முயற்சி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம்.

கேன் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ஆலைகளை மூடி நெருக்கடி கொடுத்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை.

ஆவின் பாலை கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்க முடியாதா? நெகிழி பொருட்கள் தடை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் தயாரிக்கப்படும் பட்டாசில் தடைசெய்யப்பட்ட மூலப்பொருட்கள் உள்ளனவா? விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி வன்முறை குறித்த அமளியால் 2-வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம். ஹோலி விடுமுறைக்குப் பின் விவாதம் நடத்த தயார் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு.