தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
தொடர் மழையால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. மிக கனமழை எச்சரிக்கையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல தடை
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை. முழு கொள்ளளவை எட்டியது ஈரோடு பவானிசாகர் அணை.
தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை.
திருத்தப்பட்ட குரூப் 2, 2ஏ புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. கிராமப்புற மாணவர்கள் எளிதாக தேர்வெழுதும் வகையில் நடவடிக்கை.
மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்.
பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.