தமிழ்நாடு

#TopNews: தமிழக பட்ஜெட் தாக்கல் முதல்.. கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் வரை..!

#TopNews: தமிழக பட்ஜெட் தாக்கல் முதல்.. கப்பலில் தவிக்கும் இந்தியர்கள் வரை..!

Rasus

தேர்தலுக்கு முந்தைய முழு பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல். அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்பு.

குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் 3 பேர் கைது. டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை பேரவையில் விவாதிக்கக்கோரி தீர்மானம் கொண்டுவருகிறார் ஸ்டாலின்.

தாய்லாந்தில் இருந்து கொல்கத்தா வந்த பயணிகளில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு. இரண்டு பேரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பு.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பானில் முதல் உயிரிழப்பு. கப்பலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல்.

ஆந்திராவில் வரிஏய்ப்பு செய்ததாக 3 கட்டுமான நிறுவனங்களில் அதிரடி சோதனை. 2000 கோடி ரூபாய்க்கும் மேல் வருமானத்திற்கு கணக்கு காட்டவில்லை என தகவல்.

கருணை ‌மனு நிராகரிப்புக்கு எதி‌‌ரா‌க நிர்பயா குற்றவாளி தொடர்ந்த வழக்கு. வினய் ஷர்மா மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்‌றம்.

ஓபி‌எஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு. உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை.

2019-ஆம் ஆண்டின் சிறந்த‌ ஹாக்கி வீரராக இந்திய அணி ‌கேப்டன் மன்பிரீத் சிங் தேர்வு. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் சிறந்த‌ வீரர் விருதை வென்ற முதல் இந்தியர்‌