தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்..!

இன்றைய முக்கியச் செய்திகள்..!

Rasus

சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை. பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக வானிலை மையம் தகவல்.

வடகிழக்கு பருவமழை பணிகளை மேற்கொள்ள மாவட்ட ரீதியாக 42 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம். ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என்றும் அரசு அறிவிப்பு

தலைவர் இல்லாத கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம். அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் சாடல்.

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல். முதல் மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த தொன்மையான பொருட்களை தர மத்திய அரசு ஒப்புதல் எனவும் பேட்டி.

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் விசாரணை நிறைவு. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மூன்றாவது வாரம் தொடங்க வாய்ப்பு. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை. 33 கோடி ரூபாய் பறிமுதல்- முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் தகவல்.‌