தமிழ்நாடு

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்; முடியும் வடகிழக்கு பருவமழை; இன்னும் முக்கியச் செய்திகள்.! #TopNews

இன்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்; முடியும் வடகிழக்கு பருவமழை; இன்னும் முக்கியச் செய்திகள்.! #TopNews

Rasus

பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தகவல்.

சரிவில் இருந்து மீளும் வல்லமை இந்திய பொருளாதாரத்துக்கு உள்ளதாக பிரதமர் நம்பிக்கை. பட்ஜெட் தயாரிப்பில் மக்களின் ஆலோசனைகளை வரவேற்பதாகவும் கருத்து.

வாகன சோதனையின்போது சுட்டுக் கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர். சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு.

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி.

ஈராக்கில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அருகே தாக்குதல். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.

அமைதி பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததையடுத்து வர்த்தக துறையில் மாற்றங்கள். தங்கம் விலை சவரனுக்கு 736 ரூபாய் குறைந்தது. சென்செக்ஸ் 634 புள்ளிகள் உயர்வு.

சென்னையில் புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அடுத்த ஆண்டு முதல் அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு.

வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதாக வானிலை ஆய்வு மையம் தகவல். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உறைபனிக் காலம் தொடக்கம்.