தமிழ்நாடு

சொர்க்கவாசல் திறப்பு முதல்...ஜேஎன்யூ மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல் வரை..! #TopNews

சொர்க்கவாசல் திறப்பு முதல்...ஜேஎன்யூ மாணவர்கள் மீதான கொடூரத் தாக்குதல் வரை..! #TopNews

Rasus

2020-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை ‌கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆளுநர் உரையில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என‌ எதிர்பார்ப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு. கோவிந்தா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கொடூரத் தாக்குதல். முகமூடி அணிந்தவர்கள் நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் காயம்.

டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம். கலவரம் தொடர்பான அறிக்கை அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவு.

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் கொலை. சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்.

அமெரிக்காவை ஈரான் தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை. தங்களுடன் பிரச்னையை வளர்க்கும் தைரியம் அமெரிக்காவுக்கு கிடையாது என ஈரான் அதிரடி பதில்.

மழையால் இந்தியா இலங்கை இடையேயான முதலாவது டி20 ஆட்டம் கைவிடப்பட்டது. ஆண்டின் முதல் போட்டியே ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றம்.