தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.
மக்களுக்கு இன்னல் கொடுக்காத வகையில் விவசாயிகள் அமைதி வழிப் போராட்டத்தை தொடர உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். அரசியல் சாசன உரிமை இருப்பதால் ஒரு நகரத்தையே கைப்பற்ற முயற்சிக்கூடாது என்றும் கருத்து.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம். சட்ட நகலை முதலமைச்சர் கெஜ்ரிவால் கிழித்தெறிந்ததால் பரபரப்பு.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சிகள் இன்று உண்ணாவிரதம். காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்த முடிவு.
55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை. பிரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி50 ராக்கெட். தகவல் தொடர்புக்கான செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்.
நான் ஆணையிட்டால் எனத் தொடங்கும் எம்ஜிஆர் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி மேடையில் ஸ்டாலினும், டுவிட்டரில் கமல்ஹாசனும் விமர்சனம். தற்செயலா அல்லது கூட்டணிக்கான அஸ்திவாரமா என உதிக்கும் கேள்வி.
எக்காரணத்தைக் கொண்டும் மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது. 30 ஆயிரம் பேரை தனியார் மூலம் பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தங்கமணி விளக்கம்.
நீலகிரி அருகே ஒரே வாரத்தில் 3 பேரைக் கொன்ற ஒற்றை யானையைப் பிடிக்கும் பணிகள் நீடிக்கிறது. அடர்ந்த வனத்துக்குள் யானையைத் தேட ட்ரோன்களை பயன்படுத்தும் வனத்துறை.
விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது யோகா. முதல்கட்டமாக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் சேர்க்கப்படுகிறது.