தமிழ்நாடு

இன்றைய முக்கியச் செய்திகள்!

webteam

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார். வயது மூப்பின் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது.

சேஷனின் தேர்தல் சீர்திருத்தங்களால் ஜனநாயகம் வலுவடைந்தாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல். தேர்தல் ஆணையர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் என முன்னாள் ஆணையர் குரேஷி புகழாரம்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு. சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சோனியாவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் சரத் பவார்.

அயோத்தி தீர்ப்பைத் தொடர்ந்து இந்து, இஸ்லாமிய மதத் தலைவர்களுடன் அஜித் தோவல் சந்திப்பு. அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணிக்காப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார் ஏ.பி.சஹி.

வழக்கறிஞர்கள் உதவி இல்லாமல் தாமாக ஆஜாராகி வாதிடுவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் 6 விக்கெட் வீழ்த்தி அபாரம்.