தமிழ்நாடு

இன்றைய தலைப்புச் செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்

webteam

மேகதாது அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கக்கூடாது முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளனர். 

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக உள்ள தங்கத் தமிழ்ச்செல்வன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிப்பதாக கூறி வெளியான ஒரு ஒலிப்பதிவு அரசியல் ‌களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது