தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை:
தினமும் காலையில் எழுந்ததும் இன்றைய தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்று எண்ணும்படி செய்கிறது தங்கத்தின் ஏற்ற இறக்கங்கள்.
தங்கம் வாங்க நினைப்பவர்கள் இன்னமும் விலை குறையட்டும் என்று நினைக்கின்ற வேளையில் திடீரென்று அதன் விலையானது அதிகரிக்கிறது. சரி இன்னமும் அதிகரித்துவிடுவதற்குள் தங்கத்தை வாங்கி விடலாம் என்று நினைத்து தங்கத்தை வாங்கி வீடு வருவதற்குள் தங்கத்தின் விலையானது குறைகிறது. இப்படி தங்கத்தின் விலையானது பரமபதம் ஆடுகிறது.
இப்படி ஏற்ற இறக்கங்களை காட்டி வரும் தங்கமானது மேலும் அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் நிபுணர்கள். இதனால் சாமானியர்களின் எட்டாக்கனி வரிசையில் தங்கமும் சேர்ந்துவிட்டது.
அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின்னர் தங்கத்தின் விலை மேலும் ஏறுமா அல்லது இறங்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் 58,400க்கு விற்பனையாகிறது. அதே போல் கிராம் ஒன்றிற்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கமானது 7,300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த வாரம் 55,480-க்கு விற்கப்பட்ட தங்கத்தின் விலையானது 6 நாட்களில் 2,920 விலை அதிகரித்து விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் 101 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.