சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 3 ஆயிரத்து 360 ரூபாய்குறைந்து 1 லட்சத்து 800 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 420 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 3 ஆயிரத்து 360 ரூபாய்குறைந்து 1 லட்சத்து 800 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 420 ரூபாய் குறைந்து 12 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் ஒரே நாளில் கிலோவுக்கு 23 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் ஒரு கிராமுக்கு 23 ரூபாய் குறைந்து 258 ரூபாய்க்கும் விற்பனைக்கும் செய்யப்படுகிறது. தங்கமும் வெள்ளியும் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் அவற்றை விற்று லாபம் ஈட்டத் தொடங்கி இருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் விலை சற்றுக் குறைந்து இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம், வெள்ளி விலை 2026ஆம் ஆண்டிலும் உயரும் என பிரபல சந்தை ஆய்வு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் (GOLDMAN SACHS) தெரிவித்துள்ளது. உலகளவிலான பதற்றச் சூழல் தொடரும் என்றும், நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகமாக வாங்கும் என்பதாலும் விலை உயரும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2022க்கு முன் ஆண்டுக்கு சராசரியாக 17 டன் தங்கத்தை வாங்கி வந்த மைய வங்கிகள், அடுத்தாண்டு சராசரியாக 70 டன் தங்கத்தை வாங்க வாய்ப்புள்ளதாகவும் கோல்டுமேன் சாக்ஸின் உலோகங்கள் குறித்த ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.