தமிழகத்தின் முக்கியமான அரசியல் சூழ்நிலையில், திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதில் திமுக-வின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த பொதுக்குழுவில் மொத்தமாக 14 தீர்மானங்கள் வரை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறைந்த கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, திமுக துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம். முக்கியமாக திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி அதற்கேற்ப விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.