தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில், 5,017 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரையிலான பாதிப்பு 6,30,408 ஆக உயர்ந்துள்ளது. இன்று 5,548 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,75,212 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 71 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நோய்த் தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 9,917 ஆக அதிகரித்துள்ளது. 45,279 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் ஒரேநாளில் 1,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 434 பேரும், சேலம் மாவட்டத்தில் 326 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 283 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 263 பேரும், தஞ்சை மாவட்டத்தில் 224 பேரும் ஒரேநாளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.