தமிழ்நாடு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33,075 - ஒரே நாளில் 335 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 33,075 - ஒரே நாளில் 335 பேர் உயிரிழப்பு

Veeramani

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்று புதிதாக 6,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி 335 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் 3,264 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,154 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2-ம் இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 16, 31,291 ஆக உயர்ந்துள்ளது, தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,31,596 ஆகவும், இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 18,005 ஆகவும் உயர்ந்திருக்கிறது.