தமிழ்நாடு

இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்

இன்று இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தகவல்

webteam

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வாட்டிய வதக்கிய கோடை வெயில் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. கேரள உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம் என்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை சில தினங்களில் தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.