தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் கேஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி அஸ்மிதா டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி மனோஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த சரண்யா காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ரோஹித், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ், கொட்டாம்பட்டியைச் சேர்ந்த காளிச்செல்வி என 8 பேர் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தனர்.